2009இன் மிக முக்கிய காணொளியை பார்ப்பதற்கு அநுர தயாரா..!
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டமைக்கான ஆவணங்கள் காணொளிகளாக தம்மிடம் இருப்பதாக கனடாவை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரிவித்துள்ளார்.
அவை தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணொளிகளில் சிலவற்றை கொடுப்பதற்கு தயார் என நேரு குணரத்னம் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களுடன் இணைந்து அந்த காணொளிகளை கண்களில் இருந்து கண்ணீர் வராமல் பார்க்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கையில் இனப்படுகொலை நடந்ததா என்பதை காணொளிகளை பார்த்து விட்டு சொல்லுங்கள். இப்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் முன்னோடிகளும் ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடியதற்காக தடை செய்யப்பட்ட அமைப்பு ஆகும்.
அவர்களுக்கான நினைவேந்தல்கள் பல்கலைக்கழகங்கங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.
எனில், தமிழ் மக்கள் நினைவேந்தல் மேற்கொள்ளும் போது, ஏன் தடைகள் விதிக்கப்படுகின்றன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |