அம்பிட்டிய தேரருக்கு பிணை.. வெளியில் வந்து புலம்பல்
அம்பிட்டிய தேரருக்கு பிணை..
இன்று காலை கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தேரர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியில் வந்த அம்பிட்டியே தேரர், “அப்பாவி சிறுவர்கள் இருவருக்காக நான் நீதி கோரியமையினால் என்னை இன்று காலை பொலிஸார் கைது செய்ததாகவும், தண்ணீர் கூட கொடுக்காமல் இதுவரை வைத்திருந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும், நீதிமன்றம் தனக்கு பிணை வழங்கியதாகவும்” கூறினார்.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறையில் வைத்து அவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு..
அம்பாறை - உஹன பொலிஸ் நிலையத்தில், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும், குழப்ப நிலையை தோற்றுவித்ததாகவும் தெரிவித்து சுமணரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May Like This Video

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
