சிறுபோக பயிர்செய்கை மேற்கொள்ள விவசாயிகள் எதிர்கொண்டுள்ள சவால்கள்(Video)
கிளிநொச்சியில் சிறுபோக பயிர்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் நெல்லினை உலறவைக்க வீதியில் படுத்துறங்குவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி - கல்மடு நகர் குளம் தர்மபுரம் பகுதியில் வசிக்கும் விவசாயிகளே இவ்வாறான சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் சிரமம்
விவசாயிகள் தமக்கென நெல் உலறவிடும் தளம் இன்மையால் வீதியை மறித்து நெல்லை உலறவிடுகின்றனர்.
தற்போது தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால் இரவு வேளைகளில் அந்த வீதியிலேயே படுத்துரங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு வெளிமாவட்டங்களில் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யும் வியாபாரிகள் தமக்கு தேவையான எரிபொருள் பெறமுடியாமையினால் தொடர்ச்சியாக அறுவடை முடிந்து 15 நாட்கள் கடந்த நிலையிலும் வீதியிலேயே நெல்லை உலரவிட்டுள்ளனர்.
கோரிக்கை
எனவே இந்த விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி செய்யுமாறு பிரதேச கமக்கார அமைப்புகள் கேட்டு கொள்கின்றனர்.
வவுனியாவில் சிறுபோக அறுவடைக்கான டீசல் விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுப்பு(Photo) |