வவுனியாவில் சிறுபோக அறுவடைக்கான டீசல் விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுப்பு(Video)
வவுனியாவில் சிறுபோக நெல் அறுவடைக்குரிய டீசலினை கட்டம் கட்டமாக வழங்கும் செயற்பாடு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா மாவட்டத்தில் 12 ஆயிரத்து 238 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. யூலை மாதம் முதல் கிழமையில் இருந்து ஓகஸ்ட் மாதம் கடைசி கிழமை வரை சிறுபோக நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
சிறுபோக நெல் அறுவடை காலம்
இதற்காக கிட்டத்தட்ட 3 இலட்சத்திற்கு மேலதிகமான டீசல் எரிபொருள் தேவைப்படுகிறது.
இதனை வாராந்தம் பகிர்ந்து வழங்குவதற்குரிய நடவடிக்கையை மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திரவின் வழிகாட்டலின் பேரில் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் நே.விஸ்னுதாஸனின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
டீசல் விநியோகம்
அந்த வகையில் தற்போது வரையான காலப்பகுதியில் 6040 ஏக்கரிற்குரிய 61156.25 லீட்டர் டீசலினை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 08 கமநல சேவை நிலையங்களின் ஊடாக விவசாயிகளிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மீதமாக உள்ள 6198 ஏக்கரிற்குரிய டீசலினை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலை விரைவில் குறைக்கப்படலாம்! புதிய தீர்மானம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு |