சிறுபோக அறுவடை செய்யும் விவசாயிகள் நெல் களஞ்சியப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தயார்
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக அறுவடை செய்யும் விவசாயிகள் தமது நெல்லை மாவட்ட நெற்களஞ்சிய சாலையில் களஞ்சியப்படுத்தி உரிய முறையில் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு எரிபொருள் மற்றும் உரம் வழங்குமாறு கோரி சங்கானையில் ஆர்ப்பாட்டம் |
சிறுபோக நெற்செய்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுபோக நெற்செய்கை அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான சந்தை வாய்ப்பு இல்லாத நிலையால் தாங்கள் நட்டத்தை எதிர் கொள்வதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோகத்தில் அறுவடை செய்யும் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் நெல் சந்தைப்படுத்தும் சபையுடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதற்கிடைப்பட்ட காலங்களில் நெல்லை அறுவடை செய்துள்ள விவசாயிகள் அதற்கான சந்தை வாய்ப்பு குறைவாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவற்றை தமது மாவட்டத்தில் உள்ள நெற்களஞ்சிய சாலையில் களஞ்சியப்படுத்தி அவற்றை உரிய முறையில் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மாவட்டத்திலேயே தயார் நிலையில் உள்ளது.
உணவுக் களஞ்சிய சாலை
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் நன்மை கருதி மாவட்ட உணவுக் களஞ்சிய சாலை ஒன்று அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த களஞ்சிய சாலையில் சுமார் 4000 மெட்ரிக் தொன் நெல்லை நன்கு உலர வைத்து, சுத்திகரித்து அவற்றை பொதிகளாக்கி எடையிட்டு களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன.
விவசாயிகள் இவ்வாறு களஞ்சியப்படுத்தி வைக்கும் சந்தர்ப்பத்தில் தங்களுடைய தேவைக்குரிய நிதியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.
ஆனாலும் கடந்த ஆண்டிலிருந்து மேற்படி களஞ்சிய சாலையை குறிப்பிட்ட சில விவசாயிகள் மட்டுமே பயன்படுத்தி பெரிதும் நன்மை அடைந்து வருகின்றனர்.
தற்போது எரிபொருள் வெளியேற்றம் மற்றும் நெல்லுக்கான சந்தை வாய்ப்பின்மை காணப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த கலைஞ்சிய சாலையினை விவசாயிகள் சரியாக பயன்படுத்தி நன்மை அடைய முடியும் என களஞ்சிய சாலை யின் நிர்வாகம் தெரிவித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளர்.