விவசாயிகளுக்கு எரிபொருள் மற்றும் உரம் வழங்குமாறு கோரி சங்கானையில் ஆர்ப்பாட்டம் (Photos)
டீசல், மண்ணெண்ணெய் மற்றும் செயற்கை உரம் என்பனவற்றை வழங்குமாறு கோரி சங்கானை பிரதேச செயலகம் முன்பாக விவசாயிகள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 12 விவசாய சம்மேளனங்களை சேர்ந்த விவசாயிகளே இன்று இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாயத்திற்கு தேவையான மண்ணெண்ணெய், டீசல், மற்றும் தேவையான பசளையினை சீராக விநியோகிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதேச செயலகத்தின் வெளிப்புற வாயிலில் இருந்து பிரதேச செயலக வளாகம் வரை சென்ற போராட்டக்காரர்கள், பிரதேச செயலாளரை சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை சமர்ப்பித்துள்ளனர்.

விவசாயிகளுக்கான உரிய தீர்வினை வழங்க முடியும்
மகஜரினை பெற்றுக்கொண்ட சங்கானை பிரதேச செயலாளர் பொ.பிரேமினி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
”விவசாயிகளது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அரசாங்க அதிபருக்கு அனுப்பவுள்ளேன். விவசாயிகள் ஒன்றரை மாதங்களாக மண்ணெண்ணெய் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இன்றுவரை எந்தவொரு வழிமுறையும் கண்டறியப்படவில்லை. மேலும், சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மூலம் சீரான எரிபொருள் விநியோக முறையினை பிரதேச செயலகத்தினால் செய்ய முடியாதுள்ளது.
இதன்காரணமாக எரிபொருள் பெற்றுக் கொடுப்பது சிரமமாகவுள்ளது. தொடர்ந்து, இதனை அரசாங்க அதிபருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.
விவசாயிகளை பொறுத்தவரையில் எரிபொருள் என்பது விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ள இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது.
எனவே, அரசாங்க அதிபரிடம் இது தொடர்பாக கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam