கிழக்கு மாகாணத்தில் 5 அதிகார சபைகளுக்கான தலைவர்கள் நியமனம்
கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா பணியகம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு, சாலை மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, முன்பள்ளி கல்வி பணியகம் ஆகிய 5 அதிகார சபைகளிக்கான தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலக்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர வழங்கி வைத்துள்ளார்.
மாகாண அதிகார சபைக்களுக்கான தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமித்து அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு திருகோணமலை ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
நியமன கடிதங்கள்
இதில் அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, கலந்துகொண்டுள்ளதுடன் இதன்போது, குறித்த நிறுவனங்களின் புதிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் சுதந்திரமாக செயற்படுவதற்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும் என்றும் அரசியல் தலையீடுகள் இன்றி தமது சேவைகளை ஆற்றக்கூடிய சூழலை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதில் மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவராக ஜி.சுகுமாறன், மாகாண சுற்றுலா பணியக தலைவராக எம்.ஜி.பிரியந்த மலவனகே, மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தலைவராக ரஜினி கணேசபிள்ளை, மாகாணசாலை மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தலைவராக கித்சிறி நவரத்ன, மாகாண முன்பள்ளி கல்வி பணியக தலைவராக அ.விஜயானந்தமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தநிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க கலந்து கொண் டுள்ளார்.




145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri