வவுனியாவில் பெண்ணொருவரின் தங்க சங்கிலி கொள்ளை
வவுனியாவில்(Vavuniya) வீதியால் சென்ற பெண்ணின் தங்க சங்கிலி மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் வவுனியா, கோயில்குளம் பகுதியில் இன்று (28.06.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
வவுனியா, கோவில்குளம் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இருவர் அவரது தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது, ஒரு பவுன் தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த இரு தினங்களுக்கு முன்பு வவுனியா, சிதம்பரபுரம் பகுதியிலும் பெண் ஒருவரை பின் தொடர்ந்து மோட்டர் சைக்கிளில் சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.
எனவே, பொது மக்கள் நகைகளுடன் வீதியில் செல்லும் போது அவதானமாகவும், பின் தொடர்பவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
![சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய விவகாரம் : கர்நாடக முன்னாள் முதல்வருக்கு எதிராக குற்றச்சாட்டு](https://cdn.ibcstack.com/article/bbea8975-d505-4d08-b68b-e59a2ea5fe65/24-667eb2efdc8b2-sm.webp)
சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய விவகாரம் : கர்நாடக முன்னாள் முதல்வருக்கு எதிராக குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தங்க,வெள்ளி நூலால் நெய்யப்பட்ட புடவையை வாங்கிய நீதா அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/ebaf1ae0-7c64-4543-8b01-3dd09e4c522b/24-667e69c5e68b2-sm.webp)
தங்க,வெள்ளி நூலால் நெய்யப்பட்ட புடவையை வாங்கிய நீதா அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
![பிரான்ஸ் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி](https://cdn.ibcstack.com/article/a2345d42-b9d5-4912-84d6-9cfac959dfe2/24-667e9fe57c6eb-sm.webp)
பிரான்ஸ் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி News Lankasri
![பல கோடிகளுக்கு சொந்தகாரியான த்ரிஷா.. வருண் மணியன் ஏமாந்தாரா? புட்டுபுட்டு வைக்கும் AL சூர்யா](https://cdn.ibcstack.com/article/e2c922b6-4439-475b-834d-fbef2a465e23/24-667e5ba59891d-sm.webp)
பல கோடிகளுக்கு சொந்தகாரியான த்ரிஷா.. வருண் மணியன் ஏமாந்தாரா? புட்டுபுட்டு வைக்கும் AL சூர்யா Manithan
![கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/90ad5568-c5b9-42f6-b20d-a6b3c96c5821/24-667ec069781b9-sm.webp)