சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய விவகாரம் : கர்நாடக முன்னாள் முதல்வருக்கு எதிராக குற்றச்சாட்டு
சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ் எடியூரப்பா உட்பட்ட மூவர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தகாத முறைக்கு உட்படுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குற்றப் புலனாய்வுத் துறையினர், தமது குற்றப்பத்திரிகையில் இந்த குற்றத்தையும் சேர்த்துள்ளனர்.
பாதுகாப்பு சட்டம்
81 வயதான எடியூரப்பா மீது சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்தும் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றப்பத்திரிகையின் படி, 2024ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி முற்பகல் 11.15 மணியளவில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 17 வயது பெண்ணும் அவரின் தாயாரும், உதவிக்காக எடியூரப்பாவை அவரது இல்லத்தில் வைத்து அவரை சந்தித்துள்ளனர்.
இதன்போதே, எடியூரப்பா 17வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்த முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இதனை குறித்த சிறுமி வெளியில் கூறிவிடக்கூடாது என்பதற்காக அவருக்கும் அவருடைய தாயாருக்கும் எடியூரப்பா சுமார் 2இலட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இந்தநிலையில் தம்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள எடியூரப்பா, கர்நாடக மேல்நீதிமன்றில் மேன்முறையீட்டையும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |