மர்ம நபரால் பாலியல் வன்புணர்வு முயற்சி - சாதாரண தர பரீட்சையை தவற விட்ட மாணவி
நிட்டம்புவ பிரதேசத்தில் சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவியை யாரோ ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்றதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனால், சாதாரண பரீட்சையில் அவரால் பங்கேற்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
சிறுவர் மற்றும் மகளிர் பணியகம்
இருட்டில் மறைந்திருந்த நபர் ஒருவர் திடீரென கட்டிப்பிடித்து அவரை கீழே பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
மாணவி கூச்சலிட்டு தாய் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தமையினால் குறித்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தாயும் மகளும் சந்தேக நபரை அடையாளம் கண்டு பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் கீழே விழுந்தமையினால் மாணவி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நிட்டம்புவ தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |