யாழில் மாணவர்களை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம்! பொலிஸார் தீவிர விசாரணை
பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கி வந்த கும்பல் ஒன்றினை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு மாணவர்களை உள்ளாக்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப் பெற்ற நிலையில் கும்பலை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஓரின சேர்க்கை
குறித்த நபர்கள் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளனர். பின்னர் அவற்றினை காணொளி பதிவாக கையடக்க தொலைபேசிகளில் பதிவு செய்து அதனை காண்பித்து தொடர்ந்து தமது இச்சைகளுக்கு மாணவர்களை பயன்படுத்தி வந்ததுடன் மாணவர்களிடம் இருந்து பணமும் பெற்று வந்துள்ளனர்.

இவை குறித்த தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அக்கும்பலை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
May you like this Video
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam