16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் எனக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
சந்தேகநபரை இன்று (12.05.2023) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 16 பாடசாலை மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் எனக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியர் களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். களுத்துறை வடக்கு - காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், 16 சிறுமிகளைத் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைத்து வைக்கப்பட்டிருந்த காணொளிகள்
தனது கணவரின் மடிக்கணினியைப் பரிசோதித்தபோது அதில் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் காணொளிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது என்று சந்தேகநபரான ஆசிரியரின் மனைவி சம்பந்தப்பட்ட மாணவிகளில் சிலரின் பெற்றோர்களுக்கு அறிவித்திருந்தார்.
இதையடுத்து, குறித்த பெற்றோர்கள் மூலமாக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில்
அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் நேற்று கைது
செய்யப்பட்டிருந்தார்.
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய என்ட்ரியால் ஷாக்கில் அண்ணாமலை குடும்பம்... மனோஜ் மாட்டிக்கொண்டாரா? Cineulagam