சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு சீல் வைப்பு: வெளியான காரணம்
பிலியந்தலை நகரில் உள்ள போகுந்தர கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான "சிபெட்கோ" எரிபொருள் நிரப்பு நிலையம் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை இலங்கை பெட்ரோலிய ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தின் நுகேகொட பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு காரணமாகவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் முறைகேடு
கொழும்பு - ஹொரணை 120 பேருந்து வழித்தடத்தில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள பொகுந்தர கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான சிபெட்கோ பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதன்படி, நுகேகொடை பிராந்திய அலுவலகத்தின் பகுதி முகாமையாளர் டொன் பிரசன்ன டிலிருக் ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று (30.10.2023) இரவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து எரிபொருள் நிலையத்திலுள்ள அனைத்து பம்புகளும் சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
