நாட்டின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி
29 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
குறித்த பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய மேலும் சில அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன.
உக்கிரமடையும் யுத்த களம்....! ஆயிரக்கணக்கில் பலியான குழந்தைகள்: துண்டிக்கப்படும் காசா நிலப்பரப்பு (Video)
ஜனாதிபதி பணிப்புரை
அவ்வகையில், மஹவ, மாத்தறை, ஹிக்கடுவ, அம்பலாங்கொட, சிதாவக, சிதாவகபுர, பாணந்துறை, ஹொரண, வத்தளை, ஜா-எல, கம்பஹா, கட்டான அபிவிருத்தித் திட்டங்கள்.
மற்றும், மஹர, கெக்கிராவ, தலாவ, மாவனல்லை, குண்டசாலை, நாவலப்பிட்டி, கம்பளை, ஹட்டன், வெலிமடை, பண்டாரவளை, வெல்லவாய அம்பாறை அபிவிருத்தித் திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளன.
திருகோணமலை அபிவிருத்தித் திட்டம் எல்ல அபிவிருத்தித் திட்டம், ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஹிக்கடுவ அபிவிருத்தித் திட்டம் என்பன வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவற்றில் எல்ல அபிவிருத்தித் திட்டம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.