நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பு மனு தாக்கல்!
நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட குழுவினர் தாக்கல் செய்துள்ளனர்.
இன்று (11.10.2024) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் குறித்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யானை சின்னத்தில் போட்டி
நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

இதன் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளாரான ஜீவன் தொண்டமான் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam