ஜனாதிபதி தலைமையில் உருவாகும் தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெறுவோம் - இ.தொ.கா

Sri Lanka Upcountry People Ceylon Workers Congress Dr Ramesh Pathirana Ranil Wickremesinghe Jeevan Thondaman
By Thirumal Sep 12, 2022 07:54 AM GMT
Report

ஜனாதிபதி தலைமையில் உருவாகும் தேசிய அரசாங்கத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயமாக மக்களுக்கு சேவையாற்ற கூடிய அமைச்சை பெறும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் அமைச்சு

அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தேசிய அரசாங்கம் ஒன்று உருவாகவுள்ளது. அந்த தேசிய அரசாங்கத்தில் நிச்சயமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்கு சேவையாற்ற கூடிய அமைச்சை பெறும்.

அது ஒரு தேசிய அமைச்சு பதவியாகவும் இருக்கலாம். மலையக மக்களின் அபிவிருத்தியில் மிகவும் முக்கிய பங்களிப்பை வழங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் அரசாங்கத்தில் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு அமைச்சு பதவியை தான் பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஜனாதிபதி தலைமையில் உருவாகும் தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெறுவோம் - இ.தொ.கா | Ceylon Workers Congress

தோட்ட நிர்வாகங்களின் உரிமை மீறல்

மேலும் பெருந்தோட்டப் பகுதிகளில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் மக்கள் பராமரித்து வந்த காணிகளில் வீடுகள் நிர்மாணித்து விவசாயம் செய்யும் பொழுது அந்த மக்களுக்கு அறிவிக்காமலேயே தோட்ட நிர்வாகம், அரச சொத்தை மீள பெறல் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த மக்களை வெளியேற்றுகின்றனர்.

இவ்வாறு தோட்ட நிர்வாகம் செய்வது உரிமை மீறலாகும்.

மக்களை இவ்வாறு வெளியேற்றும் நடவடிக்கை குறித்து பல முறைப்பாடுகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானுக்கு அண்மையில் கிடைக்கப்பெற்றிருந்தது.

ஜனாதிபதி தலைமையில் உருவாகும் தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெறுவோம் - இ.தொ.கா | Ceylon Workers Congress

அதன்பின்னர், அவரின் ஆலோசனைக்கேற்ப இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரான நான் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன், இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினேன். அதன்போது ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கப்பெற்றது” என தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத்துறை அமைச்சரின் அறிக்கை

இதற்கமைவாக “தோட்ட நிர்வாகம் நினைத்தப்படி மக்களை வெளியேற்ற முடியாது என்பது குறித்து அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சில விடயங்களுக்கு பதிலளிக்க வேண்டும். அதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும். 

நீண்ட காலமாக குறித்த காணிகளில் வசிப்பவர்களை பெருந்தோட்டத்துறை அமைச்சரின் அனுமதி இன்றி எக்காரணத்திற்காகவும் வெளியேற்ற முடியாது என்ற விடயம் மிகவும் தெளிவாக அமைச்சின் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகத்தால் வழக்கு தொடரப்படுமானால், நீங்கள் எவ்வளவு காலம் காணியில் வசித்து வந்துள்ளீர்கள், அதற்கான ஆவணங்கள் இருக்கின்றதா என்பதை தோட்ட நிர்வாக பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும்.

அல்லது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆலோசனையை பெற்று அதன்பின்னர் செயற்பட வேண்டும்” என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தோட்ட நிர்வாகங்களின் ஒழுங்கற்ற செயற்பாடுகள்

அத்துடன் “ தோட்ட நிர்வாகம் தேயிலை மரங்களை உரிய முறையில் பராமரிப்பதில்லை. மருந்து தெளிப்பதில்லை, உரம் இடுவதில்லை, அங்குள்ள மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகின்றார்கள்.

தேயிலைகளுக்கு எவ்வித போசாக்கும் பெற்றுக்கொடுக்காமல் தொழிலாளர்களிடம் 20 கிலோ அல்லது 25 கிலோ தேயிலை பறித்து தருமாறு தோட்ட நிர்வாகம் கோருகின்றார்கள்.

ஜனாதிபதி தலைமையில் உருவாகும் தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெறுவோம் - இ.தொ.கா | Ceylon Workers Congress

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

ஆயிரம் ரூபா சம்பள விவகாரம்

மேலும் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கத்தின் வர்த்தமானிக்கு எதிராக ஆயிரம் ரூபா வழங்க முடியாது என தோட்ட கம்பனிகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்கள்.

குறித்த வழக்கு தாக்கல் செய்த 22 கம்பனிகளின் கோரிக்கையை தள்ளுப்படி செய்து ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கைக்காசுக்கு தொழில் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் நிரந்தரமாக தோட்ட தொழிலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.

எனவே, தொழிலாளர்கள் இந்த விடயம் தொடர்பில் எமது கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதேவேளை தேயிலை கொழுந்து இல்லாத சந்தர்ப்பங்களில் 20 கிலோவிற்கு அதிகமாக தேயிலை பறிக்க வேண்டும் என தோட்ட நிர்வாகம் இனிமேல் தொழிலாளர்களுக்கு  பணிக்க முடியாது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.  

மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US