தோட்ட நிர்வாகம் தொடர்பில் ஜீவன் தொண்டமானுடன் கலந்துரையாடல் (video)
கொட்டகலை - ரொசிட்டா தோட்டத்தில் தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று(25) ரொசிட்டா தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக இடம் பெற்றுள்ளது.
“அண்மைக்காலமாக குறித்த தோட்டத்தில் பல்வேறு கெடுபிடிகளை தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் மீது நடத்தி வந்துள்ளது.
தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடு
இதனையடுத்து இப்பிரச்சினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலையீட்டால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த ஜீவன் தொண்டமான், உடனடியாக கொட்டகலை ரொசிட்டா தோட்ட காரியாலயத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டு தோட்ட முகாமையாளருடன் மற்றும் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் கெடுபிடிகளை சுட்டிக்காட்டி கலந்துரையாடியுள்ளார்.
பிரச்சினைக்கான தீர்வு
இதனையடுத்து தோட்டநிர்வாகம் இதனை ஏற்றுக்கொண்டு சுமூகமான நிலைமைக்கு வந்ததுடன் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதன் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், இலங்கை
தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஏ.பி சக்திவேல், கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர்
பாலசுப்பிரமணியம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.



உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
