மின்சாரம் தாக்கி இலங்கை மின்சார சபை ஊழியர் உயிரிழப்பு
கடவத்தை - மங்கட வீதி பகுதியில் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானத்தில் மின்சார ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று(02.10.2026) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உயர் அழுத்த மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் மின் கம்பமொன்றை சீரமைக்க முயன்ற 4 மின்சார ஊழியர்கள் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரு ஊழியர்கள் பலத்த காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.