இலங்கை மின்சார சபை தலைவர் பதவி விலகல்!
இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாப்பிட்டிய தனது பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவருக்கும் அவருக்கும் இடையிலான முறுகல் காரணமாக இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வகையில் மின்கட்டணத்தை அதிகரிப்பதில் அரசாங்கம் திடமான நிலைப்பாட்டில் உள்ளது.
பதவி விலகல்
எனினும் நுகர்வோர் நலன் கருதி திலக் சியம்பலாப்பிட்டிய அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் , திலக் சியம்பலாப்பிட்டியவை பெலவத்தையில் உள்ள தனது அலுவலகத்துக்கு வரவழைத்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதன் காரணமாக கடும் அதிருப்தியுற்ற திலக் சியம்பலாப்பிட்டிய தனது பதவியில் இருந்து விலகிக் கொள்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri