மத்திய மாகாணத்தில் பாடசாலைகளை மூடுவதா இல்லையா என்பது குறித்து நாளை தீர்மானம்
மத்திய மாகாணத்தில் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் நோய்த் தொற்று பரவுகை அபாயம் நிலவி வரும் நிலையில் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதா அல்லது மூடுவதா என்பது நாளை தீர்மானிக்கப்படும் என மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி செனராத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மாகாணத்தின் சில பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் நாளைய தினம் மாலை மத்திய மாகாண ஆளுனர் லலித் யூ கமகே தலைமையில் மாகாண கோவிட் தடுப்பு குழு கூட உள்ளதாகவும், இதில் பாடசாலைகளை திறந்திருப்பதா அல்லது மூடுவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் நாளைய தினம் மத்திய மாகாணத்தில் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.