மின் தூக்கி செயலிழந்தமையினால் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்
மத்திய தபால் பரிவர்த்தனையின் ஊழியர்கள் தொழிற்சங்கப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
எட்டு மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் மின்தூக்கிகள் இரண்டும் செயலிழந்திருப்பதாகவும் இதனை பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தொழிற்சங்கப் போராட்டம்
மின்தூக்கிகள் பழுதுபார்க்கப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் தொழிற்சங்கப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சின்தக பண்டார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த கட்டடத்தை சுமார் மூவாயிரம் பேர் நாளாந்தம் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
பொருட்களுக்கான மின்தூக்கி ஐந்தாம் மாடி வரையில் செயற்படுவதாகவும் அதன்பின் பொதிகளை தபால் ஊழியர்கள் சுமந்து செல்ல நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த மின்தூக்கியை பழுதுபார்க்கும் நடவடிக்கைகளை தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைத்துள்ளதாக தபால் மா அதிபர் பீ.சாந்தகுமார தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |