மத்திய அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்ட 12 மணி நேரத்தில் இத்தனை லட்சம் வருமானமா?
மத்திய அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு 12 மணி நேரத்தில் ரூ. 2,805,100.00 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) கடந்த சனிக்கிழமை (15) ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுசரணையின் கீழ் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
பாதை திறக்கப்பட்ட முதல் 12 மணிநேரத்தில் (16) நண்பகல் 12.00 மணியிலிருந்து நள்ளிரவு 12.00 மணி வரை ரூ. 2,805,100.00 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
மீரிகம முதல் குருநாகல் வரையிலான அதிவேக நெடுஞ்சாலையில் முதல் 12 மணித்தியாலங்களில் 13,583 வாகனங்கள் பயணித்துள்ளதுடன் விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை.
மேலும், சனிக்கிழமை (15) நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரை மீரிகமவிலிருந்து குருநாகல் வரை கெட்டுவான நுழைவாயில் வரையிலும், கெட்டுவானவிலிருந்து மீரிகம வரையிலும் பொதுமக்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மீரிகம - குருநாகல் வரையான வீதி பொது போக்குவரத்திற்காக திறக்கப்படும் திகதி அறிவிப்பு
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri