இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை
கிரிப்டோகரன்சியின் பயன்பாடு மற்றும் அதில் முதலீடு செய்வதன் அபாயம் குறித்து கவனமாக இருக்குமாறு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்துகிறது.
கிரிப்டோகரன்சியின் பயன்பாடு சில தரப்பினரால் இலாபகரமான முதலீடாக விளம்பரப்படுத்தப்படுகிறது, மேலும் இதுபோன்ற முதலீடுகளால் மக்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
நிதி மோசடிகள் விரைவான வளர்ச்சியைக் காட்டுவதால், தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், Crypto நாணயம் தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் மத்திய வங்கி அனுமதி வழங்கவில்லை என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
