இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள விவகாரம் தொடர்பில், மத்திய வங்கியின் அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
70 வீதமாக மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் மட்டத்தில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.
சம்பள அதிகரிப்பு
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தனது எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில்,
சம்பள அதிகரிப்பு தொடர்பான அண்மைய சர்ச்சைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை பொது நிதி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்குமாறு பரிந்துரைத்துள்ளார்.
I suggest to the Committee on Public Finance, that it is appropriate to summon the Central Bank of Sri Lanka to the Committee & seek clarification on the recent controversy regarding salary increments @HarshadeSilvaMP https://t.co/nGxguTGquz
— Shehan Semasinghe (@ShehanSema) February 25, 2024
மேலும், இந்த சமயத்தில் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காமல் இருப்பது நல்லது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கியின் ஊழியர்களின் அண்மைய சம்பளத் திருத்தத்தின் பின்னணியில் உள்ள செயல்முறை மற்றும் நியாயம் குறித்து, பொருத்தமான நாடாளுமன்றக் குழுவின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்கு வாய்ப்பை வழங்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர், ஜனாதிபதியிடம் எழுத்துமூலக் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், அண்மைய நாட்களில் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இதேபோன்றதொரு சம்பள அதிகரிப்பை ஏனைய அரச ஊழியர்களும் கோருவார்களாயின் பாரிய பிரச்சினைக்கு நாடு முகம்கொடுக்கக் கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |