இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு
கடந்த வருடத்தின் அரச வருமானம் குறித்து இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த(2022) வருடம் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் அரச வருமானம் 1,806.7 பில்லியனாக காணப்பட்டது என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
அரச வருமானம்
இது 1,322.0 பில்லியனுடன் ஒப்பிடும் போது 36% அதிகரிப்பு என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2022 நவம்பரில், 220.7 பில்லியனாகவும் ஒக்டோபரில், 138 பில்லியனாக அரச வருமானம் பதிவாகியுள்ளது.
இதனால், ஒக்டோபருடன் ஒப்பிடுகையில், நவம்பரில் அரச வருவாய் 60% அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை 2022 ஒக்டோபரில், 120.3 பில்லியனாக இருந்த வரி வருவாய் நவம்பரில் 205.1 பில்லியனாக 70% அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.