மத்திய வங்கி சுயாதீன தன்மையை இழந்துள்ளது
இலங்கை மத்திய வங்கி சுயாதீன தன்மையை இழந்து உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்று அவர் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொள்ளும் போது மத்திய வங்கி சுயாதீனமாக செயல்படுவது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வருமான வரி சட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் மீறப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த வருமான வரி சட்டம் ஏற்புடையது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாமாக முன்வைக்கும் மதிப்பீட்டுக்கு அமைய வரி விதிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் செயல் பட வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பிலும் அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஒப்பீட்டளவில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு கூடுதலாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணங்களும் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கான முனைப்புகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam