மத்திய வங்கியின் தங்க கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி அதிகரித்துள்ளது.
கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்து 6,178 மில்லியன் டொலரில் இருந்து 6,243 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான தங்க கையிருப்பு, 2025 செப்டம்பர் மாதத்தில் 11.9% குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
தங்க கையிருப்பு
2025 ஓகஸ்ட் மாதத்தில் 52 மில்லியன் டொலராக காணப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் தங்க கையிருப்பின் பெறுமதி, 2025 செப்டம்பர் மாதத்தில் 58 மில்லியனாக அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மத்திய வங்கியின் தங்க கையிருப்பின் பெறுமதி 40 மில்லியனாக காணப்பட்டது.
அதன்படி, இந்த ஆண்டின் முதல் 09 மாதங்களில் மத்திய வங்கியின் தங்க கையிருப்பு 45% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




