மத்தள விமான நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கான வெளிச்செல்லல் வரி தொடர்பாக வழங்கப்பட்ட சலுகை காலத்தை நீட்டிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025-01-06 திகதி அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கான நேர அட்டவணைக்கமைய பயணங்களில் ஈடுபடும் விமான சேவைகளுக்கு வெளிச்செல்லல் வரியிலிருந்து விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வரி சலுகையின் கீழ் சில விமான சேவைகள் ஏற்கனவே விமான நிலையத்துக்கு வரும் மற்றும் வெளியேறும் நிச்சயிக்கப்பட்ட விமான பயணங்களை கொண்டுள்ள சர்வதேச விமான பயணங்கள் அமுல்படுத்தியுள்ள அதேவேளை, சில விமான சேவைகள் குறித்த விமான நிலையத்துக்கு விமான பயணங்களை செயற்பாடுகளை இயக்குவதற்காக தமது ஆர்வங்களை வெளியிட்டுள்ளன.

வரி விடுவிப்பு காலம்
மேற்குறித்த வெளியேறல் வரிச் சலுகையை தொடர்ந்தும் பேணுவதன் மூலம் போட்டியை அதிகரிப்பதன் ஊடாக குறித்த விமான நிலையத்துக்கு நிச்சயிக்கப்பட்ட சர்வதேச விமான சேவைகளை கவருதல் மற்றும் தற்போதுள்ள சர்வதேச விமானப் பயண செயற்பாடுகளை தொடர்ச்சியாக பேணலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கமைய தற்போது செயற்படுத்தப்படும் வெளிச்செல்லல் வரி விடுவிப்பு காலத்தை 2027.06.26 திகதி வரை தொடர்ந்தும் நீடிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, மத்தள விமான நிலையத்தில் விசேட வனசீவராசிகள் அலுவலகத்தை நிறுவுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan