மத்திய வங்கி பிணைமுறி விவகாரம்: நீதிமன்றத்தின் உத்தரவு
மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் இதுவரை வழங்காத வங்கிக் கணக்கு விபரங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸாருக்கு வழங்குமாறு கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத்துறை பொலிஸார் கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் இன்று நகர்வு மனுவொன்றைச் சமர்ப்பித்து முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த உத்தரவை கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதவான் அசங்க போதரகம பிறப்பித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாயின் இதுவரை வழங்கப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களுக்கு மேலதிகமாக மத்திய வங்கியின் கணக்கு விபரங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய பெர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விபரங்கள் என்பவற்றை வழங்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

நிதிப் பிரிவு
அதனைக் கருத்திற் கொண்ட கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதவான் அசங்க போதரகம, மத்திய வங்கியின் வங்கிக் கணக்கு மற்றும் பெர்பெசுவில் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு என்பவற்றுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் கோரும் ஏனைய விபரங்களையும் வழங்குமாறு மத்திய வங்கியின் நிதிப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவத்தினரால் பாதாள குழுக்களுக்கு கைமாற்றப்படும் துப்பாக்கிகள்.. அநுர விடுத்த எச்சரிக்கை!
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |