முன்னாள் இராணுவத்தினரால் பாதாள குழுக்களுக்கு கைமாற்றப்படும் துப்பாக்கிகள்.. அநுர விடுத்த எச்சரிக்கை!
இலங்கையில் இடம்பெறும் தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் எவ்வாறு குற்றவாளிகளிடம் புழக்கத்தில் இருக்கின்றது என்ற சந்தேகம் பொதுமக்களிடம் நிலவி வந்தது.
இந்நிலையில், கொழும்பில் இன்று (30.10.2025) நடைபெற்ற போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு' நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதற்கு பதிலளிக்கும் விதமாக உரையாற்றியிருந்தார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் பணியாற்றிய சில பொலிஸ் அதிகாரிகள் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகளை விற்றுவிட்டு நாட்டை விட்டு தப்பியோடியிருப்பதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
போதைப்பொருட்கள்
அத்துடன், இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறாமல் வெளியேறிய அதிகாரிகளும் பாதாள குழுக்களுக்கு துப்பாக்கிகளை கைமாற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், போதைப்பொருட்கள் இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam