திருகோணமலையில் கரை ஒதுங்கிய சிவப்புநிற நண்டுகள்! பொதுமக்கள் பீதி
திருகோணமலை, உட்துறைமுக வீதிக் கடற்கரைப்பகுதியில் பெருமளவான சிவப்புநிற நண்டுகள் உயிரற்ற நிலையில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட காலப்பகுதியில் இதுபோன்று கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவில் இறந்து கரை ஒதுங்கியதை நினைவு கூரும் மக்கள், மீண்டும் ஒரு இயற்கை அனர்த்தம் நிகழக்கூடுமோ என்ற ஆழ்ந்த அச்சத்தில் உள்ளனர்.
சுனாமி ஏற்பட்டதற்கு முன்னர் இதேபோன்று மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கியதாகப் பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
பதற்றம்
இதனால், இப்பகுதி மக்கள் மத்தியில் ஒருவித பதற்றம் நிலவுகிறது. 

அச்சத்திற்கான அடிப்படை மற்றும் அறிவியல் காரணங்கள் பொதுவாக, பெருமளவிலான கடல்வாழ் உயிரினங்கள், குறிப்பாக நண்டுகள் அல்லது மீன்கள் திடீரெனக் கரை ஒதுங்குவதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும்.
இவை ஒரு இயற்கைப் பேரழிவின் அறிகுறியாக இருக்கலாம் என்று மக்கள் நம்புவது வழக்கம் என்றாலும், இதற்குப் பெரும்பாலும் சூழலியல் அல்லது காலநிலை தொடர்பான காரணங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன.


 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        