வவுனியாவை வந்தடைந்த மடு மாதாவின் திருச்சொரூப திருப்பயணம்
மடு தேவாலய மாதாவுக்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு மாதாவின் திருச்சொரூபம் எடுத்துச் செல்லப்படும் திருப்பயணம் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தினை வந்தடைந்துள்ளது.
மறை மாவட்ட பங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படும் திருப்பயணம் நேற்று (23.01.2024) வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தினை வந்தடைந்ததுள்ளது.
இந்நிலையில், மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்ட தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு 25ஆவது ஆண்டு யூபிலியை நினைவுகூறும் முகமாக மடு அன்னையின் திருச்சொரூபம் மன்னார் மறைமாவட்ட பங்கு தளங்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழமையான நிகழ்வாகும்.
இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம்
இதற்கமைய இந்த ஆண்டும் மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்டு 100 ஆவது ஆண்டு யூபிலியை முன்னிட்டு மடு அன்னையின் திருச்சொரூபம் மடுவிலிருந்து மன்னார், வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மறை மாவட்டங்களின் பங்குத் தளங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அந்த வகையில் மடு மாதாவின் திருச்சொரூபம் நேற்று வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தினை வந்தடைந்துள்ளது.
மேலும், பவனியில் நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |