உலகம் அழிவதாக சர்ச்சையை கிளப்பிய நபரின் பேசுபொருளாகியுள்ள புதிய கருத்து..
தன்னைத்தானே தீர்க்கத்தரிசி என்று கூறிக்கொண்டு உலகம் அழியப்போவதாக அறிவித்தவர், தற்போது உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார் என்று கூறியுள்ளமையானது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
கானாவைச் சேர்ந்த எபோ ஜீசஸ் (Ebo Jesus) என்ற நபர், சமூக ஊடகங்களில் எபோ நோவா (Ebo Noah) என்ற பெயராலும் அறியப்படுகிறார்.
தெய்வீக தரிசனம்
டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து உலகம் முழுவதும் பேரழிவான வெள்ளம் தொடங்கும் என அவர் கூறியதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறார்.

30 வயதான இவர், தன்னை ஒரு தீர்க்கதரிசி என அறிவித்து, மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மழை பெய்து உலகம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கும் என கடவுளிடமிருந்து தமக்கு தெய்வீக தரிசனம் கிடைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
அந்த பேரழிவில் இருந்து உயிர் தப்ப நோவாவின் பேழையைப் போல நவீன பேழைகள் கட்டுமாறு கடவுள் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கானாவில் மரத்தால் பேழைகள் கட்டப்படும் காட்சிகளை எபோ நோவா சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
TikTok, YouTube போன்ற தளங்களில் அந்த காணொளிகள் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளன.
உலக அழிவு
கடந்த ஒகஸ்ட் மாதத்தில் “What will happen and how it will happen” (என்ன நடக்கும், அது எப்படி நடக்கும்) என்ற தலைப்பில் வெளியிட்ட காணொளியில், கிறிஸ்துமஸ் நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மழை பெய்யும் என கடவுள் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

அந்த வெள்ள காலம் முழுவதும் ஒரு பேழையில் வாழ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எபோ வெளியிட்ட காணொளிகளின் அடிப்படையில், அவர் பல பேழைகளை கட்டி வருகிறார் அல்லது கட்டியுள்ளார் என தெரியவருகின்றது.
ஆனால் அவை, பைபிளில் (Genesis) குறிப்பிடப்படும் நோவாவின் பேழையுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறிய அளவிலானவை. பைபிள் விளக்கத்தின் படி, நோவாவின் பேழை சுமார் 510 அடி நீளம், 85 அடி அகலம், 51 அடி உயரம் கொண்டதாக கூறப்படுகிறது.சர்வதேச செய்திகளின் அடிப்படையில், எபோ இதுவரை சுமார் 10 மரப் பேழைகள் கட்டியுள்ளார்.
பல முன்னறிவிப்புகள்
மேலும், பைபிளில் வரும் நோவா கதையை ஒத்த வகையில், மிருகங்களையும் (livestock) தனது காணொளிகளில் காட்டியுள்ளார்.
அவர் பதிவுகளில் அடிக்கடி உண்ணாவிரதம், பிரார்த்தனை, சாக்குப் புடவை அணிந்து உலக முடிவை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன.
எபோவின் கூற்றுகள் பைபிளுக்கு எதிரானவை எனவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உலக முடிவை முன்னறிவித்த முதல் நபர் எபோ நோவா அல்ல. இதற்கு முன் இதுபோன்ற பல முன்னறிவிப்புகள் தோல்வியடைந்துள்ளன.
தீர்க்கத்தரிசி
இந்த நிலையில் தான், தன்னை தீர்க்கத்தரிசி என்று கூறிய எபோ நபோ திடீரென தனது பேச்சை மாற்றிக்கொண்டுள்ளார்.

அதாவது, அவர் கடவுளிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததால், அதனை ஏற்றுக்கொண்ட கடவுள் உலக அழிவை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட காணொளியை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri