கொழும்பில் அதிகரித்துள்ள வீடற்ற மக்களின் தொகை.. வெளியாகியுள்ள தகவல்
குடியேற இடம் இல்லாததால், தலைக்கு மேல் கூரை இல்லாத வாழ்விடங்களில் வாழும் மக்களின் தொகை 2,281 ஆக பதிவாகியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையால் வெளியிடப்பட்ட 2024 - மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பின் மாவட்ட வாரியாக இலங்கையின் மக்கள் தொகை அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணம்
அதற்கமைய, நாட்டில் வீடற்றவர்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மேல் மாகாணத்தில் வசிப்பது தெரிய வந்துள்ளது.
அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதுடன் மேல் மாகாணத்தில் 841 வீடற்ற மக்கள் வசிக்கின்றனர், அவர்களில் அதிகபட்சமாக 536 பேர் கொழும்பு மாவட்டத்தில் வசிக்கின்றனர்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் வீடற்றவர்களின் எண்ணிக்கை 73 ஆகும். வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் வீடற்றவர்கள் யாரும் இல்லை என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri
