போர் நிறுத்த விவகாரம்! ஹமாஸுற்கு அமெரிக்கா அறைகூவல்
ஹமாஸ் ஒப்புக்கொண்டால், காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை செயல்படுத்த தாம், தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஏ . பிளிங்கன்(Antony Blinken) சுட்டிக்காட்டியுள்ளார்.
முந்தைய மாதங்களில் போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தாலும், ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த தரப்பாக இருந்து வருகிறது என்று பிளிங்கன் கூறியுள்ளார்.
காசாவில் உள்ள இஸ்ரேலிய கைதிகளை விடுவித்து, இஸ்ரேலிய துருப்புக்களை பிரதேசத்திலிருந்து திரும்பப் பெறும் ஒரு போர்நிறுத்த திட்டத்தை அமெரிக்கா கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தது.
ஹமாஸ் ஒப்பந்தம்
இதற்கமைய ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது. எனினும் இஸ்ரேல் தேவை ஏற்பட்டால் போரை தொடர்வோம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிலடெல்பி காரிடார் என்று அழைக்கப்படும் பாலஸ்தீனிய பிரதேசத்தின் எகிப்துடனான எல்லை உட்பட காசாவின் சில பகுதிகளைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பை இஸ்ரேல் காட்டி வருகிறது.
போர் நிறுத்தம்
இதன் விளைவுகளை கருத்தில் கொண்டே அமெரிக்கா, போர் நிறுத்தம் தொடர்பிலான, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்கள் நிர்வாகத்தின் மீதமுள்ள நாட்களில் அல்லது ஜனவரி 20 க்குப் பிறகு நாங்கள் எங்கு சென்றாலும், இந்த ஒப்பந்தம் கடந்த மே மாதம் பைடன் முன்வைத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை நெருக்கமாக கொண்டு அமையும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |