அனைத்து பயணிகள் போக்குவரத்து பேருந்துகளிலும் சிசிரீவி கருவிகளை பொருத்த அரசு நடவடிக்கை
அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பேருந்துகளிலும் சிசிரீவி கருவிகளை பொருத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் எதிர்காலத்தில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு இது தொடர்பில் அறிவிக்கப்படும் என அவர் மேலும், தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை
“பொதுப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் சிசிரீவி கருவிகள் பொருத்துவதன் மூலம் ஓரளவிற்கு குறைக்க எதிர்பார்க்கிறோம்.
இதனால் பயணிகள் போக்குவரத்து சேவை பஸ்களுக்கு வழங்கப்படும் வருடாந்த அனுமதிப்பத்திரத்தில் சிசிரீவி கருவிகள் பொருத்துவது உரிம நிபந்தனையாக உள்ளடக்குவது தொடர்பில் பொறுப்பான தரப்பினருக்கு பிரேரணையை அனுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளோம்.
மேலும், நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும்
நாட்டின் 120,000 பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவை வழங்குவது சவாலாக அமைந்திருந்தது. அந்த வகையில் தற்போது மாணவர் ஒருவருக்காக ஒதுக்கப்படும் தொகையை 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
போசாக்கு குறைப்பாடு
இலங்கையின் பெருமளவான மாணவர்கள் போசாக்கு குறைப்பாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில் புரோட்டின் நிறைந்த போசாக்கான உணவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமையவே நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் திட்டத்தை செயற்படுத்தவுள்ளோம்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
