முல்லைத்தீவில் இறைச்சிக்காக வெட்டப்படும் மாடுகளில் முறைகேடு: மக்கள் விசனம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபைகுட்பட்ட பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்படும்
மாடுகளில் முறைகேடு இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சிக்காக வெட்டப்படும் மாடுகள் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே வெட்டுவதற்கு அனுமதிக்கப்படுகின்றது எனவும் அவற்றில் சிறிய கன்றுகளையும் இறைச்சிக்கு வெட்டுவதற்கு அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கபெற்றிருந்தது.
இறைச்சிக்காக வெட்டப்படும் மாடுகள்
அதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேசசபை செயலாளர் ச.கிருஷாந்தனிடம் வினவிய போது, “இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொண்டுவரப்படும் மாடுகள் 24 மணித்தியாலயம் பிரதேச சபையில் கட்டப்பட்டு அவற்றை புதுக்குடியிருப்பு சுகாதார பணிமனை சுகாதார பரிசோதகர்கள், கால்நடை வைத்தியர் பார்வையிட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இறைச்சிக்கு வெட்டப்படுகின்றது.
பார்ப்பதற்கு கன்று போல் தெரிந்தாலும் மாட்டின் பல்லை வைத்தே வயது உறுதிப்படுத்தப்படுகின்றது” என கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சுகாதார பரிசோதகரிடம் வினவியபோது ஐந்து மாடு பிரதேச சபையில் கட்டப்பட்டு இருப்பதாகவும் அதில் இரண்டு மாடுகளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
