வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் : நெருக்கடி நிலையில் அரசாங்கம்
வாகன இறக்குமதிக்கு தேவையான போதிய அந்நிய செலாவணி நாட்டில் இல்லை, இதன் காரணமாகவே வாகனங்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அந்நிய செலாவணி நெருக்கடி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலகு ரக வாகனங்களை கொள்வனவு செய்ய மீண்டும் நாம் தயாராகி வருவதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு அப்பாட்பட்டவை. நாம் அந்நிய செலாவணி நெருக்கடியில் உள்ளோம்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஏனைய அமைச்சுக்களுடைய செயலாளர்களுடன் வாகனங்களுக்கான எரிபொருளை குறைப்பது தொடர்பிலும், மின்சார வாகனங்களுக்கான கொள்கைகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் நாம் கலந்துரையாடினோம்.
இதனால், வாகன இறக்குமதிக்குத் தேவையான அந்நிய செலாவணி எம்மிடத்தில் இல்லை.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் நாம் அனைத்தையும் இறக்குமதி செய்வதற்கு வேண்டுமாயின் எமக்கு டொலர் வழங்குவதற்கான வேலைத்திட்டம் காணப்பட வேண்டும்.
எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக, ஏனைய நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாகவே அரசாங்கத்தைகொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |