தமிழ் தலைவர்கள் பிரித்தானிய தூதரகத்தின் மூடிய அறைக்குள் நடத்திய இரகசியம் அம்பலம்!
இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன் பிரித்தானியா எப்போதும் துணை நிற்கும் என பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மி தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பின் போது கூறியிருந்தார்.
இந்தநிலையில், குறித்த கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டிய விடயம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுமா என்ற கேள்வி பிரித்தானிய துணைப்பிரதமர் சார்பில் விபரிக்கப்பட்டபோது இந்த அரசு புதிய அரசியலமைப்பை கொண்டுவர மாட்டாது என கஜேந்திரகுமார் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலுள்ள பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகராலயத்தில் மூடிய அறையில் நடைபெற்ற சந்திப்பில் தற்போதைய அரசு புதிய அரசியலமைப்பை கொண்டு வரமாட்டாது என கஜேந்திரகுமார் கூறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
இந்தநிலையில், கஜேந்திரகுமார் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தாரா என்பது குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam