9 வருடங்களுக்குப் பின்னர் கூடியது கத்தோலிக்க சபை - ஜனாதிபதி அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல்
நீண்ட 9 வருட இடைவெளிக்குப் பின்னர் கத்தோலிக்க சபை மற்றும் அரசாங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் சுமுகமான முறையில் நடைபெற்றுள்ளது.
விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில் நேற்றுமுன்தினம் மாலை இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்ட முக்கிய விவரங்கள் வருமாறு, அரசால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்க பாடசாலைகள் தற்போது எதிர்கொண்டு வரும் நிர்வாக ரீதியான சிக்கல்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, கத்தோலிக்க மதக் கல்விக்கான பிரத்தியேக ஆசிரியர் பணிக்குழாம் முறையொன்றைத் தயாரித்தல், ஆசிரியர் சேவைக்காகக் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட் தந்தைமாரை இணைத்துக்கொள்வதன் அவசியம்.
உத்தியோகபூர்வ தீர்மானம்
அத்துடன் அரசால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்க பாடசாலைகளின் நாளாந்த நடவடிக்கைகளுக்காகக் கல்வி அமைச்சின் நேரடி ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய பொறிமுறையை உருவாக்குதல் ஆகிய விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் ஆக்கபூர்வமாகக் கலந்துரையாடினர்.

கத்தோலிக்க சபை எதிர்கொள்ளும் கல்வி மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தொடர்ச்சியான தீர்வுகளைக் காணும் நோக்கில், இத்தகைய கலந்துரையாடல்களை ஆண்டுக்கு மூன்று முறை நடத்துவதற்கு இக்கூட்டத்தில் உத்தியோகபூர்வமாகத் தீர்மானிக்கப்பட்டது. இந்த விசேட கூட்டுச் சபையின் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே செயற்படவுள்ளார்.
"இந்தக் கலந்துரையாடலை நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஏற்பாடு செய்து தந்தமைக்காகக் கத்தோலிக்க சபை சார்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தற்போதைய அரசுக்குப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், நாட்டில் எந்தவொரு பாகுபாடுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் தத்தமது மதத்தைக் கற்றுக்கொள்வதற்குக் கிடைத்துள்ள உரிமையையும் வாய்ப்பையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும், கல்வித் துறையில் நிலவும் ஏனைய பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் கத்தோலிக்க சபை சார்பில் அருட்தந்தை ஹெரல்ட் அந்தோனி பெரேரா, அருட் தந்தை கிறிஸ்டி நோயல் இம்மானுவேல், அருட் தந்தை அன்டன் ரஞ்சித், அருட் தந்தை விமல் சிறி ஜயசூரிய உள்ளிட்ட கத்தோலிக்க சபையின் முக்கிய அருட்தந்தைமார்களும், அரச தரப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.







எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
விபத்து ஏற்பட்டு பரிதாப நிலைமையில் இருக்கும் தமிழ், அடுத்து என்ன... சின்ன மருமகள் சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri