“வியாதி தாங்க முடியவில்லை” - கெசல்கமுவ ஓயாவிலிருந்து முதியவரொருவர் சடலமாக மீட்பு (PHOTOS)
காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ - பொகவான,கெசல்கமுவ ஓயாவில் முதியவரின் சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் பொகவந்தலாவ பொகவானை தோட்டப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75வயது கொண்ட பெரியண்ணன் கருப்பையா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் திடீரென காணாமல்போயுள்ள நிலையில் அவரை தேடும் நடவடிக்கை உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த நபர் சடலமாக கெசல்கமுவ ஓயாவில் மிதந்துக்கொண்டு இருந்ததை அவதானித்து பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதுடன், சம்பவ இடத்தில் உயிரிழந்த நபரின் பாதணிகள், குடை, மாதாந்த வைத்திய பரிசோதனை, புத்தகம் என்பன மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட மருத்துவ புத்தகத்தில் தனக்கு வியாதி தாங்க முடியவில்லை என்றும், தனது முடிவுக்கு தானே பொறுப்பு என்றும், தனது மகன் மிகவும் நல்லவர் என்றும் தன்னை அன்பாக பார்த்துக்கொள்வார் எனவும், யாரையும் தண்டிக்க வேண்டாம் என்றும் இறந்தவரின் கையெழுத்தில் இறப்பதற்கு முன்பே கடிதம் எழுதி வைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/5612f5be-a0b6-4d73-9470-b9a8147529e8/23-63d717b529690.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/2a795da1-f62a-4ee5-92c2-21415c79ab45/23-63d717b57bc5e.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/09600055-bf95-4951-a8db-9117b4bb52db/23-63d717b5c9907.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/bb8d946b-0ef0-4a67-8c06-82f49bdf3279/23-63d717b61dc44.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/b13a683e-6cb7-459f-897c-1af42d6a64c3/23-63d717b65b3d8.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ee5c63e0-5a7d-4368-be7c-d373cf1d5aa9/23-63d717b6a2acd.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/1799072b-d562-4dfd-a6f7-71125ee4d232/23-63d717b6ebb62.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/17a76b80-7da6-4770-bde7-7572cbfc763e/23-63d717b741a05.webp)