தமிழரசுக் கட்சியின் வழக்கு விவகாரம்: இடம்பெறவுள்ள கலந்தாய்வு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கு எதிரான வழக்கில் விளக்கத்துக்கு முன்னரான கலந்தாய்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் குறித்த வழக்கு நேற்று (30) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே விளக்கத்துக்கு முன்னரான கலந்தாய்வுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பதில் மனுக்கள்
அதேவேளை, இந்த வழக்கை விரைந்து முடிவுறுத்துவதற்கு வசதியாக மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், சண்முகம் குகதாசன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகிய எதிராளிகள் 4 நேற்று தமது பதில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், ஏனைய நான்கு எதிராளிகளான எம்.ஏ.சுமந்திரன், குலநாயகம், ப.சத்தியலிங்கம், இரத்தினவடிவேல் ஆகியோர் சார்பிலான பதில் மனுக்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam