ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு (Galagoda Aththe Gnanasara) எதிரான வழக்கில் சட்ட மா அதிபர் ஆலோசனையை எதிர்பார்த்திருப்பதாக கொழும்பு- கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பு, கொம்பனித் தெருவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு எதிரான கடுமையான நிந்தனைகளை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்த வழக்கு இன்று (5) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சட்ட மா அதிபரி்ன் ஆலோசனை
இதன்போது ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்த நிலையில், கொம்பனித் தெரு பொலிஸார் வழக்கை நெறிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்குத் தொடர்பில் சட்ட மா அதிபரி்ன் ஆலோசனையை எதிர்பார்த்துள்ளதாக கோட்டை நீதவான் லங்கா நிலுபுலி அறிவித்துள்ளார்.
வழக்கின் அடுத்த தவணை விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 03ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
