அரியநேத்திரனுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்துள்ள ஏறாவூர் பொலிஸார் (Photos)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கின் முறி (Bond) பத்திரத்தில் கையொப்பம் பெற்று விசாரணை செய்வதற்காக வவுணதீவு பொலிஸார் ப.அரியநேத்திரனின் அம்பிளாந்துறை வீட்டில் சென்று முறைப்பாட்டை பதிவு செய்ததுடன் அதற்கான வழக்கு எதிர்வரும் நவம்பர் 17ம் திகதி ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் உள்ளதால் அதற்கு செல்லுமாறும் பணித்துள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள விடயம்
கடந்த 08/10/2023ல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செங்கலடி மத்திய மகாவித்தியாலயத்தின் 149வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள சென்றபோது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக ஏறாவூர் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட மேலும் 35க்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அரியநேத்திரன் கருத்து கூறுகையில் காவி உடை தரித்த மட்டக்களப்பு பிக்கு அம்பிட்டிய தேரர் போல் சண்டித்தனம் புரிந்திருந்தால் தமக்கு இந்த நிலை வந்திராது என கூறிடுயுள்ளார்.








ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 23 மணி நேரம் முன்

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
