நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றின் தீர்மானம்
நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய, குறித்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
15 மில்லியன் ரூபா
இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (05.09.2024) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாமல் ராஜபக்ச சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாவை முதலீடு செய்தமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த முறைப்பாட்டிற்கான விசாரணைகள் தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri