தேர்தலில் போட்டியிட்டு செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு எதிராக வழக்கு
2024இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறிய திருகோணமலை வேட்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினரால் நேற்றையதினம்(28.01.2025) குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பிரிவின் பொறுப்பதிகாரி முகம்மது சுல்தான் நஜீம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள், சுயேட்சை குழுக்களின் வேட்பாளர்கள் 17 பேருக்கும் மற்றும் கட்சிகளின் செயலாளர்கள், சுயேட்சை குழுக்களின் தலைவர்கள் 9 பேருக்கும் எதிராக இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் கட்டளை
குறித்த நடவடிக்கையானது தேர்தல் திணைக்களத்தின் சட்டத்தின் பிரகாரம் பொலிஸ் மா அதிபரின் கட்டளைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri
