சட்டத்தரணிகளை அவமதிக்கும் விதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக வழக்கு
கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தடையாணை மற்றும் அதற்காக செயற்பட்ட சட்டத்தரணிகளை அவமதிக்கும் விதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி திருக்குமரநாதன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் நேற்றையதினம் (21.02.2024) பிறப்பித்திருந்த இடைக்கால தடை கட்டாணை வழக்கில் முன்னிலையாகியிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வழக்கு தாக்கல்
இதன் போது, கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களை, உறுப்பினர்களாக செயற்படுவதை தடைசெய்யும் வகையில் குறித்த கட்டாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,குறித்த கட்டாணை தொடர்பிலும், அதற்கு சார்பாக செயற்பட்ட சட்டத்தரணிகளுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மற்றும் நேரடியாகவும் கருத்துக்கள் வெளியிட்டு வருபவர்களுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா அவர்களிடம் தெரிவித்துள்ளதாக அவர் இதன் பொது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |