இளங்குமரன் எம்.பிக்கு எதிரான வழக்கு: நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல்

Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government Law and Order Karunananthan Ilankumaran
By Rakesh Oct 27, 2026 06:57 AM GMT
Report

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் கிளிநொச்சியில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த கிராம சேவையாளரைத் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தாக்கினார் என்று கூறப்படும் விடயத்தை ஒட்டிய வழக்கில் குற்றப்பத்திரம் திறந்த நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டப்பட்டது.

இந்த நடவடிக்கை நேற்று(26.10.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடமையில் இருந்த கிராம சேவையாளரைத் தாக்கியமை, கடமையில் இருந்த அரச ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தமை ஆகிய இரு குற்றச்சாட்டுகள் நேற்று(26) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்த அவருக்கு வாசித்துக் காட்டப்பட்டன.

நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல்

இரண்டு குற்றச்சாட்டுகளிலும் தான் சுத்தவாளி என்று அவர் நீதிமன்றில் மறுத்துரைத்தார்.

இதனையடுத்து, இந்த விடயத்தை ஒட்டிய வழக்கை வரும் பெப்ரவரி 18ஆம் திகதி பிற்பகலில் விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் நேர நிர்ணயம் செய்துள்ளது.

இளங்குமரன் எம்.பிக்கு எதிரான வழக்கு: நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் | Case Against Mp Ilangumaran

கிளிநொச்சி நீதிவான் கிருஷாந்தன் முன்னிலையில் இந்த வழக்கு நேற்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கிராம சேவையாளரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார்.

9 மாதங்கள் கழித்து மீண்டும் விசாரணை

இந்த வழக்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு 9 மாத கால அவகாசம் வழங்கி நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்திருந்தது.

ஆயினும் கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி 9 மாதங்கள் கழித்து இந்த வழக்கு மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸ் தரப்பு வழக்குத் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இளங்குமரன் எம்.பிக்கு எதிரான வழக்கு: நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் | Case Against Mp Ilangumaran

இதனையடுத்து, இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப் பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், 3 வார காலம் அவகாசம் வழங்கி வழக்கை நேற்றைய தினத்துக்கு ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரத்தைப் பொலிஸார் மன்றில் தாக்கல் செய்திருந்தனர். 

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாகனத்தில் சமந்தபத்ர தேரர்! சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள சர்ச்சை

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாகனத்தில் சமந்தபத்ர தேரர்! சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள சர்ச்சை

மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்

மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்



7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US