ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 81 பேருக்கு எதிராக வழக்கு:365 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அரசுடமை
ஈஸ்டர் ஞாயிறு தாக்கல் சம்பந்தமான இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் 196 பேர் தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான கைது செய்யப்பட்டவர்களில் 81 பேருக்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. 493 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் கமல் குணரத்ன கூறியுள்ளார்.
அதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் 365 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
165 மில்லியன் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
