கோழைகளைப் போன்றல்லாது தேர்தலை நடாத்துங்கள் – கர்தினால்
கோழைகளைப் போன்றல்லாது தேர்தலை உரிய நேரத்தில் நடாத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் அதற்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளிடம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தோல்விக்கு அஞ்சும் கோழைகள் என வரலாற்றில் இடம்பிடிக்காதிருக்க வேண்டும்
அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி காரணமாக தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுகின்றது என்றால் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோல்விக்கு அஞ்சும் கோழைகள் என வரலாற்றில் இடம்பிடிக்காதிருக்க வேண்டும் என்ற அறிவு எமது நாட்டு தலைவர்களுக்கு உண்டு என தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடாத்தும் கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டதன் மூலம் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.




